close
Choose your channels

'கபாலி'யுடன் கனெக்சன் ஆன 'கடவுள் இருக்கான் குமாரு'

Saturday, September 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூலாகி இந்திய திரையுலகையே ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் 'கபாலி' படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியுள்ள ''கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.