close
Choose your channels

கலியுகத்துல போராடுகிற ஒவ்வொருத்தர் கூடயும் இருக்காரு: 'ஹனுமான்' டிரைலர்..!

Tuesday, December 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேராபத்திலிருந்து மனித குலத்தை காக்க நீ வந்தே ஆகவேண்டும் ‘ஹனுமான்’ என்று சாமியார் கோரிக்கை விடுத்தவுடன் மீண்டும் பூமிக்கு வரும் ‘ஹனுமான்’ செய்யும் மாயாஜாலங்கள் தான் இந்த படம் என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இந்துக்களின் புனித கடவுள்களில் ஒருவரான ‘ஹனுமான்’ குறித்து ஏற்கனவே பல திரைப்படங்கள் வந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு திரைப்படம் தான் ‘ஹனுமான்’

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட பத்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூன்று நிமிட ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தேஜா சாஜா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராஜ், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகிய இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஆக்சன் காட்சிகள், மாயாஜால காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் என அமைந்துள்ள இந்த மூன்று நிமிட டைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு கயிறை கட்டி ஹெலிகாப்டரை நிறுத்தும் காட்சிகளை ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.