close
Choose your channels

படத்தில் நடிப்பதை விட சம்பளம் அதிகம்? கடை திறப்பு விழாவில் அதிக கவனம் செலுத்தும் ஹனிரோஸ்

Friday, August 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தில் மூன்று அல்லது ஆறு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து நடிப்பதை விட ஒரு சில மணி நேரங்கள் சென்று கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டால் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதால் நடிகை ஹனிரோஸ் கடை திறப்பு விழாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

நடிகை ஹனிரோஸ் தமிழில் ’முதல் கனவே’ ’சிங்கம் புலி’ ’மல்லுக்கட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் மலையாளத்திலும் கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ’வீரசிம்ஹ ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்த நிலையில் அந்த படத்தின் நாயகன் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்தார். இந்த படத்தை அடுத்து அவருக்கு அதிக தெலுங்கு படங்கள் வாய்ப்புகள் அதிகம் வருகிறது. தற்போது அவர் ’ரச்சேல்’ என்ற பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க கொடுக்கும் சம்பளத்தை விட கடை திறப்பு விழாவுக்கு சென்றால் அதிக சம்பளம் கிடைப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடை திறப்பு விழாக்கு சென்றால் அவருக்கு 50 முதல் 60 லட்சம் ரூபாய் கிடைப்பதாகவும், இதனால் அவர் அதிகமாக கடை திறப்பு விழாவில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஒரு சில மணி நேரங்களில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஹனிரோஸை பார்த்து தெலுங்கு திரையுலகினர் ஆச்சரியப்படுகின்றனர். அவர் கடை திறப்பு விழாவுக்கு கிளாமர் உடையில் வருவதால் அவருடைய அழகை காண கூட்டம் கூடுவதாகவும் இதனால் திறக்கப்படும் கடைக்கு நல்ல விளம்பரம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.