close
Choose your channels

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட இந்திய வீராங்கனைகள்: வைரல் வீடியோ

Wednesday, March 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த நான்கு வீராங்கனைகள் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் ஸ்ரீமதி மந்தனா அதிரடியாக விளையாடி 80 ரன்களும் பூனம் 62 ரன்கள் எடுத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டி வெற்றியுடன் முடிந்ததும் ஓய்வு அறையில் இந்திய வீராங்கனைகள் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை இந்திய வீராங்கனைகளில் ஒருவரான வேதா கிருஷ்ணமூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் வீராங்கனை மம்தா நான்கு வீராங்கனைகளை கிராஸ் செய்து போவது போலவும், அவரை பார்த்து வேதா கிருஷ்ணமூர்த்தி உள்பட நால்வரும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம ஆட்டம் போடும் காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.