close
Choose your channels

'ரெமோ' படத்தின் டைட்டில் மாற்றமா?

Monday, August 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் புதிய டைட்டில் 'ரெங்கநாதன் என்கிற மோகனா' என்றும் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து படக்குழுவினர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தப்போது இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. வரிவிலக்கிற்காக இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் படக்குழுவினர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வரும் அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.