close
Choose your channels

 ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

Thursday, May 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகவிருப்பதாக நேற்றே படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'கோமாளி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதல்முறையாக இணையும் இந்த படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சம்யூக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, கவிதா, சம்பத்ராஜ், நிதின்சத்யா, ரவிபிரகாஷ், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.