close
Choose your channels

'வேட்டையாடு விளையாடு 2': கமல் கேள்விக்கு கவுதம் மேனன் கூறிய பதில்!

Saturday, September 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ’வேட்டையாடு விளையாடு 2’ படம் குறித்த கேள்வியை கமல்ஹாசன் கேட்க அதற்கு கௌதம் மேனன் பதில் கூறியுள்ளார்.

'வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் திரைக்கதையை இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடம் தருவதாக கவுதம் மேனன் கூறியிருந்தார். ஆனால் இன்னும் அந்த திரைக்கதை வரவில்லை என்றும் கமல்ஹாசன் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த இயக்குனர் கவுதம் மேனன், ‘எழுத்தாளர் ஜெயமோகன் ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் திரைக்கதையை எழுதி வருகிறார் என்றும் சீக்கிரம் வரும் சார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ’வேட்டையாடு விளையாடு 2’ படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.