close
Choose your channels

"அதெல்லாம் ஒண்ணுமில்லை" சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டது குறித்து கமல்

Monday, September 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் நேற்று கமல்ஹாசன் ரசிகர்கள் தாக்கியதாக சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் தகவல்கள் வெளிவந்தது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது, 'இதெல்லாம் ஒன்றுமில்லை. இதுவொரு சின்ன விஷயம். அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பது நான் உங்கள் முன்னாள் பேசி கொண்டிருப்பதிலே தெரிகிறது' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் விமான நிலையத்தில் கூறியபோது, 'அதெல்லாம் ஒண்ணும் இல்லை. இதுவரை என்னுடைய பக்கத்தில்தான் சிவகார்த்திகேயன் இருந்தார். அவருக்கு பை பை சொல்லிவிட்டுத்தான் வருகிறேன்' என்று கூறினார்.

முன்னதாக கமல்ஹாசனை நடிகர் சிவகார்த்திகேயன் விமர்சனம் செய்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.