close
Choose your channels

ஆட்டம் ஆரம்பம்.. 'கமல் 233' படத்தின் மாஸ் வீடியோ..!

Thursday, September 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 233 வது திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் இந்த படத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் கமல்ஹாசன் மிலிட்டரி உடையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

இந்த மாஸ் காட்சிகளை பார்க்கும்போது கமல்ஹாசன், இந்த படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில் ’கமல் 233’ படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள ’இந்தியன் 2’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச் வினோத் இயக்கவிருக்கும் ’கமல் 233’ படத்தை முடித்தவுடன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 234’ படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.