close
Choose your channels

நடிப்புலக மேதைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

Thursday, May 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள திரைப்படங்களில் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய நடிகர்களாலே நடிப்புலக மேதை என்ற புகழை பெற்றவர் நடிகர் மோகன்லால். இவர் இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு மலையாள திரையுலகினர் மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி திரையுலகினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உங்கள் முதல் படத்திலிருந்து நான் உங்களை விரும்பி பார்த்து வருகின்றேன். உங்களுடைய ஒவ்வொரு நேர்த்தியான பணியை பார்த்து நான் பொறாமையும் பட்டுள்ளேன். அதிலும் நீங்கள் உங்கள் எதிர்பாளர்களை சந்தித்தவிதம் குறித்து வியந்துள்ளேன். நான் உங்களுடன் பணிபுரிந்தபோது உங்களை மிகவும் விரும்பினேன். என் சகோதரரே, நீங்கள் நீண்ட காலம் வாழ்க’ என தனது வாழ்த்து டுவிட்டில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் இணைந்து ‘உன்னை போல் ஒருவன்’ என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் குறைவு என்றாலும் இருவரது நடிப்பும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.