close
Choose your channels

Kill or Stay.. டிக்கெட் டு ஃபினாலேவில் புதிய டாஸ்க்.. வெளியேறுவது யார் யார்?

Thursday, December 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தரும் புள்ளிகள் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெறும் ஒரு போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த டாஸ்க் குறித்த அறிவிப்பு இன்றைய முதல் புரமோவில் உள்ளது. இதில் இரண்டு போட்டியாளர்கள் நேருக்கு நேர் உரையாடும் நிலையில் அதில் ஒருவர் இன்னொருவரை அந்த டாஸ்கிலிருந்து வெளியேற்ற வேண்டும்

முதல் கட்டமாக விஷ்ணு மற்றும் மணி விளையாடுகின்றனர். அதேபோல் பூர்ணிமா மற்றும் ரவீனா விளையாடுகிறார்கள். இதனை அடுத்து விசித்ரா மற்றும் தினேஷ் விளையாடுகிறார்கள். இந்த டாஸ்க்கில் உங்கள் எதிரில் இருப்பவருக்கு Kill கார்டை கொடுத்தால் அவர்கள் போட்டியிலிருந்து வெளியேறப்படுவார்கள். அதேபோல் நீங்கள் Stay கொடுத்தால் அவர்கள் அடுத்த ரவுண்டில் பங்கு பெறுவார்கள் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் யார் யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.