close
Choose your channels

2 நாட்களில் பட்ஜெட்டை விட 2 மடங்கு வசூல் செய்த லவ் டுடே.. இயக்குனருக்கு வலைவீசும் பிரபலங்கள்

Sunday, November 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ’லவ் டுடே’ என்ற திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் படமான 'கோமாளி’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது படமான ‘லவ் டுடே’ படத்தில் அவரே ஹீரோவாக நடித்து இயக்கினார்.

இந்த படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு என கூறப்படுகிறது.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி என்று கூறப்படும் நிலையில் இரண்டு நாட்களில் இந்த படம் 9.26 கோடி வசூல் செய்ததாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு இன்னும் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு பிரபல நடிகர்கள் வலைவீசி வருவதாக தெரிகிறது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர் ஒருவர் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.