close
Choose your channels

'வலிமை' நாயகியை கட்டிப்பிடித்து செம டான்ஸ் ஆடிய மகத்: என்ன விசேஷம் பாருங்கள்!

Friday, July 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'வலிமை’ படத்தில் நாயகியான ஹூமா குரோஷி உடன் கைகோர்த்து, கட்டிப்பிடித்து செம டான்ஸ் ஆடும் வீடியோவை நடிகர் மகத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகர் மகத் மற்றும் நடிகை ஹூமா குரோஷி ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ஹூமா குரோஷி தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அந்த நிகழ்ச்சியில் நடிகர் மகத் கலந்து கொண்டார்.

ஹூமா குரோஷி பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் அவருடன் மகத் இணைந்து நடனமாடிய வீடியோ மற்றும் கட்டிப்பிடித்து எடுக்கப்பட்ட செல்பி உள்பட சில புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் மகத் தனது சமூக வலைத்தளத்தில் ஹூமாவுக்கு வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது: ’உங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள், நீங்கள் எனது அருமையான தோழி, நீங்கள் மிகவும் வேடிக்கையான, அன்பான, மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான நபர் என்று எனக்கு தெரியும். என்னை நன்றாக புரிந்து கொண்டு எனக்கு ஆதரவளித்து எனது நண்பராக நின்றதற்கு நன்றி. எப்போதும் அப்படியே இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.