close
Choose your channels

முதல்முறையாக நடிகராக மாறும் நடிகர் மகத்!

Saturday, July 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓரிரண்டு படங்களில் நடித்து வரும் நடிகர் மகத், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கும் இந்த படத்தில் மகத் முதல்முறையாக படத்திலும் நடிகராக நடிக்கவுள்ளார்.

நடிகர் கேரக்டரில் நடிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், நடிகராகவே ஒரு படத்தில் நடிப்பது சவாலானது என்றும், இந்த படத்தின் மூலம் நான் அதிகம் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம் ஒரு த்ரில் படமாக இருந்தாலும் எனது கேரக்டர் ஜாலியானது என்றும் மகத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். இவர்களில் பாக்யஸ்ரீ என்பவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். மேலும் மூன்று முன்னணி நடிகைகள் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளனர்.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர். மேலும் சிறுத்தை கணேஷ் இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.