close
Choose your channels

'பிரேமம்' தெலுங்கு ரீமேக்கில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

Friday, February 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 'நேரம்' நடிகர் நிவின்பாலி, மடோனா செபாஸ்டியன், சாய்பல்லவி நடித்த 'பிரேமம்' திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி சென்னையிலும் 200 நாட்களுக்கும் மேல் ஓடி புதிய சாதனை படைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படம் தமிழில் விரைவில் ரீமேக் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தெலுங்கு திரையுலகம் முந்திக்கொண்டு ரீமேக் செய்து கொண்டு வருகிறது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா, அமைரா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் 'மலர்' என்ற முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கிலும் 'பிரேமம்' என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.