close
Choose your channels

கணவர், மகளுடன் 'பாபநாசம்' நடிகை ஆஷா சரத்: க்யூட் புகைப்படங்கள்..!

Thursday, July 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாபநாசம்’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஆஷா சரத் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ’பாபநாசம்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பில் அசத்தியிருப்பவர் ஆஷா சரத். மேலும் கமல்ஹாசனின் ’தூங்காவனம்’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆஷா சரத் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் தனது கணவர் மற்றும் மகளுடன் சுற்றுப்பயணம் செய்த போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

ஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தாரா என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் தற்போது அவர் இரண்டாவது மகள் கீர்த்தனா மற்றும் கணவர் சரத் உடன் எடுத்த இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த க்யூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.