close
Choose your channels

அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் புதிய 'பேட்ட' போஸ்டர்

Monday, December 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகவிருப்பது தெரிந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்பட்டு அதற்கான முன்பதிவுகளும் ஒருசில திரையரங்குகளில் ஆரம்பமானது

இந்த நிலையில் சற்றுமுன் சக்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் உலகம் முழுவதும் ஜனவரி 10ல் ரிலீஸ்' என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 10, ஒரே நாளில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 12 சனிக்கிழமை முதல் ஜனவரி 17 வியாழன் வரை நீண்ட விடுமுறை இருப்பதால் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸால் வசூல் பாதிக்க வாய்ப்பில்லை என்றும், இரண்டு படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.