close
Choose your channels

சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேல்தான் பாக்கப்போற: பேட்ட டிரைலர் விமர்சனம்

Friday, December 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் டிரைலர் திட்டமிட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கடந்த சில ரஜினியின் படங்களில் ரஜினியின் மாஸ் ஓப்பனிங் காட்சி மிஸ் ஆன நிலையில் இந்த படத்தில் மாஸ் ஓப்பனிங் காட்சி இருக்கின்றது என்பது இந்த டிரைலரில் இருந்து தெரிய வந்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் டிரைலரின் முதல் சில வினாடிகள் இந்த படத்தில் நடித்துள்ள கேரக்டர்கள் ரஜினி கேரக்டர்கள் குறித்து சில பில்டப்புகளை கூறுகின்றனர். 'பார்க்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த', 'சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேல்தான் பாக்கப்போற', 'அடிச்சு அண்டர்வேரோட ஓட விட்ருவேன், 'எவனுக்காவது பொண்டாட்டி செண்டிமெண்ட் இருந்தா அப்படியே ஓடிப்போயிறு' ஆகிய தலைவரின் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களுக்கு கிடைத்த விருந்துகள்

விஜய்சேதுபதியின் ஆக்ரோஷமான கோபம், பாபிசிம்ஹா, நவாசுதீன் வில்லத்தனம், சசிகுமாரின் கெத்து என இந்த படத்தின் அனைத்து கேரக்டர்களுக்கும் மாஸ் காட்சிகள் இருப்பது டிரைலரில் தெரிய வந்துள்ளது.

அதேபோல் பழைய சிம்ரனின் தோற்றம், த்ரிஷாவின் அழகு படத்திற்கு பிளஸ் ஆக இருக்கும் என கருதப்படுகிறது. குறிப்பாக ரஜினி-சிம்ரன் ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளது.

மொத்தத்தில் தலைவர் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் படம் காத்திருக்கின்றது என்பது மட்டும் உறுதி. மேலும் இந்த டிரைலரில் வரும் 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.