close
Choose your channels

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் முக்கிய பணி இன்று தொடக்கம்!

Wednesday, April 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இந்த படத்தின் போட்டோசூட் இன்று தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானால் ரஜினியின் கெட்டப்பும் தெரிய வரும்

மேலும் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா மட்டுமே நாயகி என்றும் இரண்டாவது நாயகி யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 'தளபதி' படத்திற்கு பின் ரஜினியுடனும், 'துப்பாக்கி' ,'ஸ்பைடர்' படங்களுக்கு பின் முருகதாசுடன் அவர் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.