close
Choose your channels

ஐபிஎல் இறுதி போட்டியில் '2.0' டிரைலர்?

Friday, May 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. அதேபோல் இன்று நடைபெறும் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதும்

இந்த நிலையில் ஐபிஎல் இறுதி போட்டியின் இடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த செய்தியால் ஐபிஎல் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் உற்சாகம் அடைந்த நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும் அப்படி ஒரு திட்டம் இல்லை என்றும் லைக்கா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

'2.0' படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் உலகின் பல நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக லைக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 'காலா' வெளியாகவுள்ள நிலையில் ஒரே மாத இடையில் மீண்டும் ஒரு ரஜினி படம் வெளியானால் ரஜினி ரசிகர்களுக்கு அதைவிட வேறு மகிழ்ச்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.