close
Choose your channels

ரிலீசுக்கு முன்பே 'ரெமோ' இயக்குனருக்கு கிடைத்த பரிசு

Thursday, August 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை நேற்று பார்த்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, படம் மிக அருமையாக வந்திருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அட்லியின் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் முதல் படத்திலேயே தனது முத்திரையை அழுத்தமாக பதிய வைத்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இந்நிலையில் தான் தயாரிக்கவிருக்கும் இன்னொரு படத்தை இயக்கும் பொறுப்பையும் அவர் பாக்யராஜ் கண்ணனிடம் ஒப்படைத்துள்ளார். இது ரிலீசுக்கு முன்பே 'ரெமோ' இயக்குனருக்கு கிடைத்த பரிசாக கருதப்படுகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் - நயன்தாரா படம், சிவகார்த்திகேயன் - சமந்தா படம், நிவின்பாலி படம் ஆகியவற்றை தயாரிக்கவுள்ள ஆர்.டி.ராஜா, 'ரெமோ' இயக்குனர் இயக்கும் படத்தையும் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.