close
Choose your channels

தளபதி விஜய் பாணியில் களமிறங்கிய ஷாருக்கான்: வைரல் புகைப்படம்

Wednesday, May 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் பாணியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எடுத்த செல்பி புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது .

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவான ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது விஜய்யை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் ஒரு செல்பி எடுத்து அந்த செல்பி புகைப்படத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படம் அந்த ஆண்டின் அதிக லைக்ஸ் மற்றும் ரீடுவிட் செய்யப்பட்ட புகைப்படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த நிலையில் நேற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தனது வீட்டின் முன் குவிந்த ஏராளமான ரசிகர்களுடன் புகை செல்பி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து கூற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ஷாருக்கான் அவர்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு 25 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

தளபதி விஜய்யின் செல்பியையும், ஷாருக்கானின் செல்பியையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.