close
Choose your channels

சிம்புவின் 'AAA' படத்துக்கு எத்தனை டீசர்

Wednesday, August 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த படப்பிடிப்பில் சிம்புவின் மதுரை மைக்கேல் கேரக்டர் குறித்த காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 'மதுரை மைகேல்' கேரக்டருடன் கூடிய டீசர் உருவாக்கும் பணியில் இயக்குனர் ஆதிக் பிசியாக இருப்பதாகவும், விரைவில் இந்த டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிம்பு நடிக்கும் மூன்று கேரக்டருக்கு மூன்று டீசரும், இசை வெளியீடு தினத்தன்று டிரைலரும் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
சிம்பு, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் அவர்களின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த் மற்றும் படத்தொகுப்பாளராக ரூபன் பணியாற்றி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.