close
Choose your channels

சிம்புவின் 'AAA' டீசர் விமர்சனம்

Friday, October 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் டீசர் இன்று நள்ளிரவு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பாரப்பையும் வேண்டுகோளையும் அடுத்து சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
இந்த டீசரில் மதுரை மைக்கேல் சிம்புவின் எண்ட்ரியே அட்டகாசமாக உள்ளது. ஏற்கனவே ஃபர்ஸ்ட்லுக்கில் பார்த்தபடி சிகரெட்டை பாட்டிலில் எரியும் தீயில் இருந்து பற்ற வைப்பதுதான் எண்ட்ரி காட்சி
'அவன் இன்னொரு கூட்டத்துல போய் சேருகிறவன் கிடையாது. அவனுக்காகவே கூட்டத்தை உருவாக்குறவன்'
'காதலிக்கிற பொண்ணை கூட விட்டு கொடுப்பேன், ஆனால் உயிருக்குயிரான நண்பனை என்னிக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்'
ஆகிய வசனங்கள் சமீபத்தில் சிம்புவின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்துகின்றன.
ஸ்ரேயா, சிம்புவுக்கு கொடுக்கும் லிப்கிஸ், த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் ஜிவி பிரகாஷின் வசனத்தை சிம்பு பேசுவது ஆகியவை இயக்குனரின் டச்-ஆக தெரிகிறது.
யுவன்ஷங்கர் ராஜாவின் அட்டகாசமான பின்னணி இசை டீசரின் விறுவிறுப்பை அதிகரிக்கின்றது. மொத்ததில் பக்கா ஆக்சன் படமான இந்த படம் சிம்புவுக்கு உண்மையாகவே இதுவொரு வித்தியாசமான படம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.