close
Choose your channels

சிம்பு ரசிகர்களுக்கு கிடைக்கும் அட்வான்ஸ் விருந்து

Friday, October 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வரும் நாளை அதாவது அக்டோபர் 8ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு வெளியிடவுள்ளதாக வந்த செய்தியினை நேற்று பார்த்தோம்
இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த டீசர் இன்று மாலையே வெளியாகவுள்ளதாக சிம்புவின் சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு அட்வான்ஸ் விருந்தாக அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சமீபத்தில் வெளியான மினி டீசர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 'மதுரை மைக்கேல்' கேரக்டரின் இந்த டீசர் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.