close
Choose your channels

குஷ்பு அக்காவுக்கு எனது நன்றி.. மாஸ் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்..!

Sunday, May 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குஷ்பு அக்காவுக்கும், சுந்தர் சி சார் அவர்களுக்கும் நன்றி என நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருந்ததாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. முதல் நாளை விட இரண்டாவது நாளான நேற்று அதிக வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் இன்றும் கிட்டத்தட்ட திரையரங்குகளும் ஹவுஸ்புல் ஆக இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் ’அரண்மனை 4’ திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற பாடலில் நடிகை சிம்ரன் அபாரமாக டான்ஸ் ஆடிய நிலையில் அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இந்த பாடல் காட்சியின் வீடியோவை வெளியிட்டுள்ள சிம்ரன் ’அரண்மனை 4’ படத்தில் ஒரு பகுதியாக தன்னை நடிக்க வைத்ததற்கு நன்றி என்றும் இந்த படத்தின் அனைத்து பாகங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குஷ்பு அக்கா, சுந்தர் சி சார் மற்றும் நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர்களுக்கு எனது நன்றி என்றும் இந்த டான்ஸ் எனக்கு சவால் ஆனதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். சிம்ரனின் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.