close
Choose your channels

'தனி ஒருவனுடன் இணைந்தார் சிவகார்த்திகேயன்

Friday, March 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ரஜினிமுருகன்' வெற்றிப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றுள்ளது.


சமீபத்தில் 'தனி ஒருவன்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய மோகன் ராஜா, சிவகார்த்திகேயனின் புதிய படத்தை இயக்குகிறார். இரண்டு வெற்றி நட்சத்திரங்கள் இணையும் இந்த படத்தை 24 AM Studios என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'ரெமோ' திரைப்படத்தையும் 24 AM Studios நிறுவனம்தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவது முறையும் சிவகார்த்திகேயன் படத்தையே அந்த நிறுவனம் தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.