close
Choose your channels

ரஜினிகாந்த் பிறந்த நாளில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!

Monday, December 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகவும், இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.