close
Choose your channels

​"கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர்  தனுஸ்ரீ மற்றும் தேஜ் !

Friday, July 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வரும் 13ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம். இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ள தனுஸ்ரீ மற்றும் அவரது சகோதரர் தேஜ் ஆகியோர் ஏற்கனவே தமிழக ரசிகர்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் என்பது தெரிந்ததே. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான .சூப்பர் சிங்கர் குடும்பத்தை சேர்ந்த பாடகியான தனுஸ்ரீம் "கடைகுட்டி சிங்கம்" படத்தில் நடித்தது குறித்து கூறியதாவது:

'கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு தளம் ஜாலியாகவே இருந்தது .எல்லோரும் என்னை அன்பாக பார்த்துக் கொண்டார்கள். சத்யராஜ் அங்கிள், கார்த்தி அங்கிள், சாயிஷா ஆண்டி மற்றும் பிரியா ஆண்டி எல்லோரும் அவங்க குடும்பத்து குழந்தைகளாக பார்த்துக்கொண்டார்கள். படபிடிப்பு தளத்தில் நான் சில நேரங்களில் பாடினேன், அதை பார்த்து எல்லோரும்  எனக்கு முத்தம் குடுத்தார்கள். ஆனால் இப்போதைக்கு நடிப்பு தான் எனக்கு முதலில் முக்கியமானது. நடிப்பில் தான் இப்போது எனது முழு கவனமும் இருக்கிறது

'கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடக்கும். சில நேரங்களில் இரவு தாமதமாக முடியும். மீண்டும் காலை சீக்கிரமாக படப்பிடிப்பு துவங்கும். படப்பிடிப்பு தளத்தில் யார் அதிகமாக குறும்பு பண்ணுவார்கள்? என்றால் என்னுடைய தம்பிதான் அதிக குறும்பு செய்வான். நான்  எப்போதும் அமைதியாக தான் இருப்பேன் என்றும் கூறினார்.   

இசையமைப்பாளர் டி.இமான் தனுஸ்ரீயை வருங்காலங்களில் தன்னுடைய இசையில் பாடவைப்பதாக கூறியுள்ளதாகவும். இந்த படத்தில் பாடாதது பற்றி தனக்கு வருத்தமில்லை என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.