close
Choose your channels

'டாக்டர்' 'டான்' படங்களை விட இந்த படம் தான் எனக்கு பெஸ்ட்.. காரணங்களை கூறிய சிவகார்த்திகேயன்..!

Sunday, December 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்றால் ’டான்’, அந்த படம் 125 கோடி வசூல் செய்தது. அதனை அடுத்து 'டாக்டர்’ படம் 100 கோடி வசூல் செய்தது என்று கூறிய சிவகார்த்திகேயன் ஆனால் அந்த படத்தை விட தனது பெஸ்ட் படம் இதுதான் என நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறிய போது ’ரூ.100 கோடி எனது படம் வசூல் செய்ய வேண்டும் என்று அழுத்தம் எனக்கு கிடையாது. ஒருவேளை சமூக வலைதளங்களில் உள்ள ரசிகர்களுக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். நான் நடித்த 'டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது, ’டான்’ 125 கோடி வசூல் செய்தது. இந்த படம் தான் என்னுடைய திரையுலக வாழ்வில் அதிக வசூல் செய்த படம்.

ஆனால் அதே நேரத்தில் ’மாவீரன்’ ரூ.90 கோடி வரை வசூல் செய்தது. இந்த மூன்றையும் ஒப்பிடும் போது எனக்கு நல்ல வெற்றியாக ’மாவீரன்’ படத்தை தான் கூறுவேன். ஏனெனில் இது ஒரு எக்ஸ்பிரிமெண்ட் கன்டென்ட், அந்த இயக்குனரின் முந்தைய படம் நேரடி ஓடிடி என்பதால் அவரது படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்பது தெரியாது.

மேலும் இந்த படத்தில் புதிய இசையமைப்பாளர், புதிய தயாரிப்பாளர் மற்றும் அந்த படம் எந்த விடுமுறை நாளிலும் ரிலீஸ் ஆகவில்லை, எனவே ’மாவீரன்’ படம் தான் உண்மையான வெற்றி படம் என்று நான் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.