close
Choose your channels

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 4 போட்டியாளர்கள்.. ரவீனாவை குறிவைத்தது இத்தனை பேர்களா?

Monday, December 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் நாமினேஷன் படலம் குறித்த வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மணிக்கு சாதகமாகவே விளையாடி வரும் ரவீனா குறித்து சக போட்டியாளர்கள் கடுப்பில் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட எல்லா போட்டியாளர்களும் அவரை நாமினேஷன் செய்கின்றனர். ரவீனாவை நிக்சன், விக்ரம் சரவணன், விஜய் வர்மா, அர்ச்சனா, மாயா ஆகியோர் நாமினேஷன் செய்கின்றனர். அவருடைய பேவரைட்டிசம் எல்லாருடைய விளையாட்டையும் பாதிக்குது என்று கூறுகின்றனர்

இதையடுத்து விக்ரமை விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு ஆகியோர் நாமினேஷன் செய்கின்றனர். விக்ரமிடம் தனித்தன்மை கொஞ்சம் கூட இல்லை என்ற காரணம் கூறப்படுகிறது.

இதையடுத்து மாயா, பூர்ணிமா, தினேஷ் ஆகியோர் விசித்ராவை நாமினேஷன் செய்கின்றனர். விசித்ரா தினேஷை நாமினேஷன் செய்தார். ஆக மொத்தத்தில் இன்றைய ப்ரோமோவில் இருந்து ரவீனா, விக்ரம், தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேறு யார் யார் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.