close
Choose your channels

விஜய்யிடம் பாராட்டு பெற்ற 'பைரவா' ஸ்டண்ட் இயக்குனர்

Sunday, November 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல்பாக டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் விஜய்யை முழு அளவில் திருப்தி செய்துள்ளதாகவும், ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு அமைத்த வித்தியாசமான சண்டைக்காட்சிகளில் விஜய் முழு ஈடுபாட்டுடன் நடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பணிகள் நடந்து கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில் நடந்ததாகவும், இந்த சண்டைக்காட்சி தத்ரூபமான முறையில் எடுக்கப்பட்டதால் காட்சிகள் அனைத்தும் ரியலாக வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகளை ரஷ் பார்த்த விஜய், அனல் அரசுவை பாராட்டியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.