close
Choose your channels

'பைரவா' பாடல்கள் உரிமை யாருக்கு?

Wednesday, December 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வர்தா புயல் பாதிப்புகளிலிருந்து சென்னையும் தமிழகத்தின் இதர பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றன. அடுத்ததாக இளையதளபதி விஜய்யின் பைரவா` பாடல்கள் என்னும் புயல், தமிழ் சினிமா ரசிகர்கள்கின் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பரதன் இயக்கத்தில், விஜய்-கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் பைரவா` படத்தின் பாடல்கள் வெளியீடு டிசம்பர் மாதம் நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாடல்கள் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் கோடிக் கணக்கான விஜய் ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் லஹரி மியுசிக் (Lahari Music) என்ற நிறுவனம், பைரவா` படத்தின் பாடல்கள் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பைரவா` ஆடியோ வெளியீட்டுத் தேதி இன்னும் இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் தகவல் வந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பைரவா` பாடல்கள் பட்டையைக் கிளப்ப இன்னும் சில நாட்களே உள்ளன என்ற தகவல் விஜய் ரசிகர்களையும் தமிழ் சினிமா இசை ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.