close
Choose your channels

'சந்தானம்' கேரக்டரில் விஜய்சேதுபதி: மாஸ் போஸ்டர் ரிலீஸ்

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் மாஸ் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதியும், மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பகத்பாசிலும் நடித்துள்ளனர். மேலும் நரேன், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன் உட்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்திற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக் குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் ’விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் குறித்த மாஸ் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ’சந்தானம்’ என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து உள்ளதாகவும் ’தீயவன் வருகிறான்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாஸ் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.