close
Choose your channels

'இருமுகன்' படத்தின் ஆறு நாள் வசூல் நிலவரம்

Wednesday, September 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடிப்பில் ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைபடம் கடந்த 8ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. ஒருசில ஊடகங்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கொடுத்திருந்த நிலையில் ஓப்பனிங் வசூலும் அதன் பின்னர் ஆகிய வசூலும் திருப்திகரமாக இருப்பதாக விநியோகிஸ்தர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படம் கடந்த ஆறு நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 24.5 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் ரூ.3.2 கோடியும், செங்கல்பட்டில் ரூ.6.5 கோடியும் கோவையில் ரூ.4.2 கோடியும், திருநெல்வேலி-கன்னியாகுமரியில் ரூ.1.2 கோடியும் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் சுமார் 450 திரையரங்குகளில் தொடர்ச்சியாக இந்த படம் நல்ல வசூலை கொடுத்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.