close
Choose your channels

'வந்தா ராஜாவாதான் வருவேன்' டிரைலர் குறித்த முக்கிய தகவல்

Tuesday, November 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இதுகுறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டிரைலருக்காக சிம்பு சமீபத்தில் டப்பிங் செய்துள்ளார். அவரது பகுதி டப்பிங் கடந்த 15ஆம் தேதி முடிந்துவிட்டதாகவும், பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் மிக விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்ன்ஸ் அறிவித்துள்ளது

சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.