close
Choose your channels

மீண்டும் தொடங்கப்படுகிறதா 'துருவ நட்சத்திரம்'? நம்பிக்கை தரும் மாஸ் புகைப்படம்!

Tuesday, August 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் நிலை இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதனை நிரூபிப்பது போல் மாஸ் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ’துருவ நட்சத்திரம்’ என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் 2016ஆம் ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என்பதும் தெரிந்ததே. பல நாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஒருசில காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்க வேண்டிய நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு நடப்பதில் தாமதம் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் கவுதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் விக்ரம் உடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் மீதி உள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டே திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, அர்ஜுன் தாஸ், ராதிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.