இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர்: சென்னை புயல் குறித்து கமல்ஹாசன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை நகரமே நிலை குலைந்தது என்பதும் பல இடங்களில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் என்பதும் தெரிந்ததே. தமிழக அரசு ஏற்கனவே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதும், தன்னார்வ தொண்டர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது
இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் வெள்ள நிவாரண உதவி செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இதற்கு முன் வந்தது சிற்றிடர், ஆனால் தற்போது வந்தது பேரிடர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நமது கடமை. மக்களுக்கு உதவுவது தான் இப்போது முக்கியம்.
காலநிலை மாற்றம் என்பது உலகம் முழுவதும் நிகழும் ஒன்று. நிவாரண பணிகளுக்காக அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக பணியாற்ற வேண்டும். இக்கட்டான நேரத்தில் யார் யாரை யார் யாரையும் குறை கூறுவதை விட்டுவிட்டு மீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும், மக்களுக்கு தேவையானவற்றை செய்ய அனைவரும் முன்வர வேண்டும்’ என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
தற்போது ஆழ்வார் பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் நம்மவர் #களத்தில்_மய்யம் #KamalHaasan𓃵 pic.twitter.com/gR1ZY04Bxf
— 𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣 (@Ramhaasan7) December 8, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments