close
Choose your channels

தளபதி விஜய்யின் 'மெர்சல்' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

Saturday, October 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் பலவித தடைகளை தகர்த்து வரும் தீபாவளி தினம் முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் நிறுவனம் நீண்ட அனுபவமுள்ள நிறுவனம் என்பதால் ஒவ்வொன்றும் மிகச்சரியாக திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடைசி நேர  பரபரப்பை தவிர்க்கும் பொருட்டு இந்த படத்தின் டிஜிட்டல் பிரிண்ட்டுகள் தற்போதே தயாராகிவிட்டது. அதுமட்டுமின்றி அந்த பிரிண்டுக்கள் வெளிநாட்டுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. எனவே வரும் தீபாவளி தினத்தில் 'மெர்சல்' படம் உலகம் முழுவதும் வெளியாவது 100% உறுதியாகியுள்ளது

'மெர்சல்' திரைப்படம் பாரீஸ் நகரின் கிராண்ட் ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் வெளியாவது, டீசருக்கு கிடைத்த உலக சாதனை என்பது உள்பட இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகவுள்ளது. 'தெறி' வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெறுமா? என்பதை வரும் தீபாவளி வரை  பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.