close
Choose your channels

நான் ஆரம்பிச்சு வச்சதை நானே முடிக்கிறேன்! ஐரா டிரைலர் விமர்சனம்

Wednesday, March 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சூப்பரா இருக்குற படத்தை மொக்கன்னு சொல்லனும், பிரைம் மினிஸ்டரை கழுவி கழுவி ஊத்தனும், எது நடந்தாலும் இலுமினாட்டி வேலைன்னு சொல்லனும் என்று இன்றைய அரசியல், சமூக அவலத்தை தோலுரிப்பதுடன் ஆரம்பிக்கும் இந்த டிரைலர், இல்லாத பேயை இருக்குற மாதிரி காண்பித்து யூடியூபில் போடப்போவதாக நயன்தாரா கூறும்போதே ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை ஊகிக்க வைக்கின்றது.

அதன்பின் இரண்டு வித்தியாசமான நயன்தாராவின் நடிப்பு, திகில் காட்சிகள், யோகிபாபுவின் காமெடி என போகும் டிரைலர் இறுதியில் நான் ஆரம்பித்து வைத்ததை நானே முடிக்கின்றேன்' என்ற நயன்தாராவின் வசனத்துடன் முடிகிறது. இந்த டிரைலரில் இருந்து நயன்தாரா ஆரம்பித்த ஒரு விஷயம் விபரீதமாக பின்னர் அதில் இருந்து அவர் எப்படி மீண்டும் வருகிறார் என்பதுதான் கதையாக இருக்குமென தெரிகிறது.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் திகில் பின்னணி இசையும், சுதர்சன் சீனிவாசனின் இருட்டு காட்சிகளும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இயக்குனர் சர்ஜூன் ஒரு த்ரில் சஸ்பென்ஸ் கதையை தரமாக கொடுத்திருப்பதாகவே தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.