close
Choose your channels

ரசிகர்களுக்கு சிம்பு தரும் கிறிஸ்துமஸ் விருந்து

Tuesday, November 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சிம்புவின் அடுத்த படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் 'மதுரை மைக்கேல்' டீசர் ஏற்கனவே நல்ல ஹிட்டாகியுள்ள நிலையில் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகவுள்ளதாக சிம்புவின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த டிரெண்ட் பாடல் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட ஆரம்பத்தில் 'தள்ளிப்போகாதே' பாடல் வெளியாகி சிம்பு ரசிகர்களுக்கு நல்ல விருந்தளித்த நிலையில் அதே வருட இறுதியில் 'சிறப்பு' பாடலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று வேடங்களில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.