close
Choose your channels

சினேகாவின் அடுத்த படத்தின் கேரக்டர் அறிவிப்பு: வைரலாகும் போஸ்டர்!

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சினேகாவின் அடுத்த படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2000ம் ஆண்டு ’என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன் பின் அவர் கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்களுடன் நடித்தார் என்பதும் திருமணத்துக்கு பின்னர் அவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து வரும் ’கிறிஸ்டோபர்’ என்ற திரைப்படத்தில் நடிகை சினேகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த நிலையில் உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கிறிஸ்டோபர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை சினேகா பீனா மரியம் என்ற கேரக்டரில் நடித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக மம்முட்டி நடித்திருக்கும் நிலையில் இது ஒரு விஜிலன்ஸ் காவலரின் வாழ்க்கை வரலாறு என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் 35 புதுமுகங்களும் நடித்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.