close
Choose your channels

பிரபல நடிகர்-தயாரிப்பாளர் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி: அண்ணாமலை நேரில் வாழ்த்து!

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் அட்லீயின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது என்பதும் அதில் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இயக்குனர் மிஷ்கின், நடிகர் கௌதம் கார்த்திக், நடிகர் விமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இயக்குனர் ஷங்கரின் மனைவி ஈஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆர்கே சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆர்கே சுரேஷ் நடித்த ’விசித்திரன்’ ‘விருமன்’ மற்றும் ’பட்டத்து ராஜா’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.