close
Choose your channels

தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தின் மாஸ் தகவல்: ரசிகர்கள் உற்சாகம்!

Thursday, September 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’ . விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடிக்கும் இந்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில் தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் நடைபெறு வருகிறது.

இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் இதில் விஜய் மற்றும் ஒரு ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் வேற லெவல் நடனமாடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் நிறைவடையும் என்றும் வரும் பொங்கல் தினத்தில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.