close
Choose your channels

'டிக் டிக் டிக்' படத்தின் அபார ஓப்பனிங் வசூல்

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, நிவேதா பேத்ராஜ் நடிப்பில் இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கிய 'டிக் டிக் டிக்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த படத்த்தில் ஒருசில லாஜிக் குறைகள் இருந்தாலும் இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற வகையில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்களை பார்ப்போம். இந்த படம் சென்னையில் 23 திரையரங்க வளாகங்களில் 279 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,82,51,417 வசூல் செய்தூள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% வரை பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் ஜெயம் ரவியின் வெற்றிப்பட பட்டியலில் இந்த படம் இணைவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.