close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு துறைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’தமிழரசன்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவுபெற்று ரிலீசுக்கு தயாராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’தமிழரசன்’ திரைப்படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது

இசைஞானி இளையராஜா இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சுரேஷ்கோபி, சோனு சூட், சங்கீதா கிருஷ்ணா, சாயாசிங், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos