close
Choose your channels

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ரஜினி-விஜய் படங்கள்

Friday, August 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்படும் என்று கடந்த சில நாட்களாக வதந்திகள் வெளியானது. ஆனால் இந்த படம் திட்டமிட்டபடி நவம்பர் 28ல் உறுதியாக வெளியாகும் என்று மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த படத்தின் புதிய டீசர் ஒன்று வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்ற புதிய செய்தியும் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் டீசரும் அதே தினத்தில் தான் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.